மீன்களின் கண்ணீரை
எவராலும் உணர முடியாது.
கல்லிலிருந்து கசியும் நீரை
கண்க்களால் காண இயலாது.
தண்ணீரில் எழுதிய எழுத்தை
பதிக்க இயலாது.
கற்பூரத்தை காற்றால்
கரைக்க முடியாது.
நிலவின் முதுகு ரகசியத்தை
அறிய இயலாது.
அதுபோல் தான்,
பெண்களின் மௌனத்தை
எவராலும் உணர முடியாது.
உணர முடியாதவன் காதலன்.
உணர முடிந்தவன் கணவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக